எனக்குத் தெரிந்த வள்ளல் விஜயகாந்த் தான் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை போட்டுடைக்கும் பிரபல நடிகை.

nalini-vijayakanth
nalini-vijayakanth

விஜயகாந்த் தற்போதைய காலகட்டத்தில் முழுநேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆனால் தற்பொழுது உடல்நல குறைவு காரணமாக வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார் வெகு விரைவிலேயே குணமடைந்து மீண்டும் அரசியலில் வெற்றி காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு முன்பாக சினிமா உலகில் விஜயகாந்த் கொடி கட்டி பறந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.80 களில் இருந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடினார்

அதன் காரணமாக ரஜினி கமல் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விஜயகாந்த் திகழ்ந்தார். சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தாரோ அதே போல தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து அசத்தினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் என்ன சாப்பிடுகிறனோ அதையே தன்னுடன் இருக்கும் அனைவரும் சாப்பிட வேண்டுமென நினைப்பவர் அந்த அளவிற்கு நல்ல உள்ளம் கொண்டவர்.

மேலும் யாரும் பட்டினியாக இருந்துவிடக் கூடாது வயிறார சாப்பிட வேண்டும் தன்னால் முடிந்த சாப்பாட்டு உதவிகள் மற்றும் ஏதேனும் உதவி என்றால் வாண்டடாக வந்து காசு கொடுப்பவர் விஜயகாந்த் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் உடன் பல்வேறு படங்களில் நடித்த நடிகை நளினி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்

அது குறித்து பார்ப்போம்.  விஜயகாந்த் அண்ணன் வேற லெவல் விஜயகாந்தின் அம்மா விஜயகாந்த்க்கு மதிய உணவு கொண்டு வருவார் அவர் அம்மா மிகவும் கண்டிப்பாக வேறு யாருக்கும் கொடுத்து விடாதே நீ மட்டும் சாப்பிடு என்று கட்டளையிட்டு செல்வார் அந்த சமயம் நான் இருப்பேன்.

உடனே என்னை விஜயகாந்த் சைகையில் அங்கு ஒளிந்துகொள் என கூறுவார் நானும் அவ்வாறு புரிந்து கொள்வேன் பிறகு அம்மா வெளியே சென்றவுடன் என்னை கூப்பிட்டு தட்டு நிறைய சாப்பாடு வைத்து என்னிடம் கொடுத்து விடுவார் எனக்கு தெரிந்த வள்ளல் என்றால் அது அண்ணா மட்டும் தான் என வெளிப்படையாக பேசினார்.