தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ சூரி. காமெடியன்னாக திரையுலகில் அறிமுகமாகி பின் ஹீரோ அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் முதலில் “வெண்ணிலா கபடி குழு” என்னும் படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது.
நல்ல படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை குவித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் இப்படி ஓடிக்கொண்டிருந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படத்தில் போலீசாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பாக சூரியின் கதாபாத்திரம் நல்ல விமர்சனத்தை பெற்று இருப்பதால் அவர் சந்தோஷத்துடன் இருக்கிறார் இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூரி பற்றி காமெடி நடிகர் போண்டாமணி பேசி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. போண்டாமணி சொன்னது என்னவென்றால்.. சூரி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நாட்களில் நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காதல் சுகுமார் அவரை கூட்டி வருவார் தினமும் 200 ரூபாய் கொடுப்பேன் பல நாட்கள் என் வீட்டில் தங்கி சாப்பிட்டு செல்வார்.
ஆனால் வளர்ந்த பின் சூரி எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை பணம் கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை என் உடல் நலம் பற்றி கூட அவர் விசாரிக்கவில்லை சினிமாவில் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என மனவேதனை உடன் பேசினார் போண்டாமணி இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.