வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரையில் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகலும் போட்டி போட்டுக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
அதில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி. விஜய் டிவியில் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகும் பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்களுக்கு என்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. விஜய் டிவி சீரியல் நடிகைகள் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சோசியல் மீடியாக்களில் வருகிறார்கள். கவர்ச்சி,அழகு என அனைத்திலும் ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது. இந்த சீரியலில் மீனாட்சியின் மருமகளாக ஜானவி என்ற ரோலில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை மோனிஷா.
இவர் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு அரண்மனைக்கிளி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கொரோனா தாக்கம் அதிகம் ஆனதால் சூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஆரம்பிக்காமல் அந்த சீரியல் பாதியிலேயே முடிந்தது.
இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 நடித்து வந்த ரட்சிதா மகாலட்சுமி விலகியதால் மகா ரோலில் மோனிஷா நடித்து வந்தார். தற்பொழுது இந்த சீரியலும் நிறைவு பெற்ற நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள பச்சைக்கிளி சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாக உள்ள நிலையில் ஜூலை 4 முதல் இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.