ஒவ்வொரு சினிமா மொழியிலும் ஒரு டாப் ஹீரோ ஹீரோயின் எப்படி இருக்கிறார்களோ அது போல டாப் இயக்குனர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதோடு அவரது திரைப்படங்கள் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி உள்ளதால் தற்போது தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் RRR என்ற திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நாயகன்களாக இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் போன்ற பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்குவதாக கூறப்படுகிறது. படத்தை ஹெச்டி தரத்தில் கொடுக்க தயாரிப்பு நிறுவனமும் இந்த படத்தின் பட்ஜெட்டை அள்ளிக் கொடுத்துள்ளது இந்த திரைப்படத்தை டிடிவி தானய்யா என்ற நிறுவனம் எடுத்து வருகிறது.
“RRR” படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படத்தை எடுத்து வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இருக்கும் சூழலில் படகுழுவிற்கு சாதகமாக இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த RRR படத்தை பற்றி ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது .அதாவது இந்த படத்தை இரண்டு OTT நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது ஹிந்தியை மட்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.