எஸ். ஜே. சூர்யா முதலில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஹீரோவாக படங்களில் நடித்தார். இயக்குனராக முதலில் அஜித்தை வைத்து வாலி பின் விஜய் வைத்து குஷி போன்ற சூப்பரான படங்களை கொடுத்து இருந்தாலும் இவருக்கு நடிக்கும் ஆசை வந்ததால் முதலில் ஓரிரு படங்களில் நடித்தார். அந்த படங்கள் எதிர்பாராத தோல்வியை தழுவ..
பின் தனது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் இதற்காக சிறு இடைவெளி எடுத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நடிக்கும் திறமையை பெற்று இருந்தார் எஸ். ஜே.சூர்யா. அந்த வகையில் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகவும் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது.
அண்மையில் கூட மாநாடு திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றுள்ளார் இப்படி ஒரு பக்கம் வில்லனாக நடிக்க மறுபக்கம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார் இப்படி ஹீரோ, வில்லனாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தற்போது புகழின் உச்சியை தொட்டு உள்ளார் எஸ் ஜே சூர்யா.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கமிட்டாகி தற்போது அசத்துகிறார் அந்த வகையில் இவர் கையில் ஒரு புதிய படம் கிடைத்துள்ளது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் ஐ வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் RC 15. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவரை தொடர்ந்து ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலியும் நடிக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
இப்படத்தில் நடிப்பதற்காக எஸ். ஜே. சூர்யாவுக்கு சுமார் 6 கோடி சம்பளம் வாங்குகிறார் அதே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அஞ்சலி சுமார் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சலி தமிழ் சினிமா உலகில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தாலும் நமக்கு சம்பளம் இப்பொழுது 5௦ லட்சம் தான் ஆனால் தமிழ் சினிமா உலகில் இப்போது ஹீரோ, வில்லனாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தியுள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு 6 கோடி கொடுத்துள்ளது அஞ்சலியை தற்போது எரிச்சலடைய வைத்துள்ளதாம்.