தமிழ் திரைவுலகில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் வருகின்ற 10ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ ‘வசந்த முல்லை’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவரை அடுத்து இந்த படத்தில் காஷ்மீரா நடித்துள்ள நிலையில் இந்த படத்தினை ரமணன் புருஷோத்தம்மா இயக்கி உள்ளார். மேலும் ராஜேஷ் முருகேசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் திரைப்படம். இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது பாபி சிம்ஹா மற்றும் காஷ்மீர் ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக மர்ம இடம் ஒன்றில் தங்கி இருக்கின்றனர்.
அங்கு திடீரென நடக்கும் மர்ம சம்பவங்களை வைத்து திகில் பறக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதான் வசந்த முல்லை படத்தின் கதை என தெரிய வருகிறது. இவர்களை அடுத்து இந்த படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் வித்யாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் வசந்த முல்லை படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.