தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலில் இருந்தால் தான் தொடர்ந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கழக தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தினை தடம், மீகான் போன்ற திரைப்படங்களை இயக்கிய தமிழ் திருமேனி இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை நிதியாக அகர்வால் நடித்திருந்தார் மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கழகத் தலைவன் திரைப்படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
எனவே இதற்காக இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பட குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் 7:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இருந்தது.
இந்நிலையில அதன்படி சரியாக கழகத் தலைவர் திரைப்படத்தின் ட்ரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் அந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் கண்ணுக்கு தெரியாமல் நம்மள குறி வச்சு ஒரு வேட்டை நடந்துட்டு இருக்குது போன்ற வசனங்களுடன் தொடங்குகிறது.