பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உருவான திரைப்படம் தான் அவதார் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் உலக சினிமாவையே அதிர வைக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தினை ஜேம்ஸ் கேமரூன் இயக்க 2009ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்தனர் அந்த வகையில் அவருடைய கனவை நினைவாக்கும் வகையில் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் அவதார் 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். கற்பனையில் மட்டுமே நாம் பார்த்து கேட்டு ரசித்த புதிய உலகை அப்படியே இந்த படம் கண்முன் நிறுத்துகிறது.
மேலும் அந்த வீடியோவில் கடலுக்கு அடியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்கள் என அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கும் வகையில் இந்த படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.