800 Movie Trailer: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை சச்சின் டெண்டுல்கர் சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 800 படம் உருவாகி இருக்கும் நிலையில் 800 படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப் போனது.
எனவே சமீபத்தில் தான் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட நிலையில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து 800 படத்தின் சர்ச்சையினால் விஜய் சேதுபதி இதிலிருந்து விலகினார்.
எனவே இதனை அடுத்து ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த மதுர் மிட்டல் தற்பொழுது முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மதிமலராக மஹிமா நம்பியார் நடிக்க 800 படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக இருந்து வரும் ஸ்ரீபதி இயக்கிய உள்ளார்.
இவர் கடந்த 2010 வெளியான கனிமொழி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்பொழுது 800 படத்தினை இயக்கியுள்ள நிலையில் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இலங்கை போரை பின்னணியாக வைத்து முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பது ட்ரெய்லர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்துல இருந்து வந்தவங்களும் குடிமகன்ங்குற அங்கீகாரம் கிடைக்கிறதே கஷ்டம்.. என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.