ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடி போட்டதால் ரஜினிக்கு நடந்த சோகம்.. அதுக்கு நீ இப்படியா வச்சி செய்வீங்க

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் நெல்சன் இணைந்து ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அவருடன் கைகோர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என மிகப்பெரிய திரையை பட்டாளமே நடித்து வருகிறது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டு..

வந்த நிலையில் தற்போது ராஜஸ்தானில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதேசமயம் ஜெயிலர் படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்கள் லீக்காகிய வண்ணமே இருக்கின்றந. கடைசியாக கூட ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு புகைப்படம் வெளியானது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி  பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. பெங்களூருவில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு ரஜினி சென்று இருக்கிறார் அண்ணன் வீட்டு பக்கத்தில் ராஜஸ்தானி ஒருவர் வசித்து வந்தார் அவர் ரஜினி வந்ததை தெரிந்து கொண்டு  அவரைப் பார்க்க வந்தாராம்.. ஹாய் ரஜினி உன் தலை முடிக்கு என்னாச்சு என்று கேட்டார் கொட்டிடுச்சு அதை மறந்து விடுவோமே  என்று ரஜினி பதில் அளித்தாராம்..

பிறகு ரிட்டயராகி ஜாலியா இருக்கிறீர்களா என்று அவர் கேட்டார் உடனே ரஜினி நான் எந்திரன் என்கின்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன் ஐஸ்வர்யா ராய் தான் ஹீரோ என கூறி உள்ளார். உடனே அவர் ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார். நான்தான் என சூப்பர் ஸ்டார் கூறி இருக்கிறார் உடனே சிறிது நேரம் ஷாக் ஆகி விட்டாராம்.. அவருடைய குழந்தைகளும் அப்பா இவர் தான் ஹீரோவாம் என கூறினார்கள்.

சிறிது நேரம் பேசாமல் பிறகு கிளம்பி விட்டார் கொஞ்சம் தூரம் போய் பிள்ளைகளிடம் ஐஸ்வர்யாராய்க்கு என்னாச்சு ஐஸ்வர்யா ராயை விடுங்க.. அபிஷேக் பச்சனுக்கு என்னாச்சு சரி அவரையும் விடுங்க.. இந்த அமிதாப்பச்சனுக்கு தான் என்னாச்சு ரஜினிக்கு போய் ஐஸ்வர்யாராய் ஹீரோயின் என பேசியது ரஜினிகாந்திலேயே விழுந்து விட்டதாம்.. திரை உலகில் மிகப்பெரிய ஆளான ரஜினிக்கு பொது இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பலருக்கும் சிறு பலருக்கும் ஏற்படுத்தியது