தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகள் எப்படி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர்,நடிகைகளுக்கும் ரசிகர்கள் உண்டு. சினிமா துறையில் குணசித்திர வேடங்களில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நீபா.
தமிழ் திரை உலகில் சில ஆண்டுகள் முன்பு தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த ‘காவலன்’ திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை நீபா. இதைத்தொடர்ந்து அவர் தோட்டா, அம்முவாகிய நான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நீபா அவர்கள் தமிழ்த் திரையுலகில் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் அதிகபட்சமாக சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்று உள்ளார் என்றே சொல்லவேண்டும்.
இந்தநிலையில் நீபா அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்று வந்த சூப்பர் மாம் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் சீசன் 2 நடைபெற்று வருகிறது இதில் நீபா மற்றும் மகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு கடினமான போட்டியில் வைக்கப்பட்டது இதில் நீபா அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தடுமாறி கீழே விழுந்த நீபா அவர்கள் முகத்தில் பலமான அடி ஏற்பட்டுள்ளது அவரது மகள் முன்னே நடந்தது தான் இதன் உச்சகட்டம்.
இதோ அந்த வீடியோ:
சூப்பர் மாம் Season-2 | ஞாயிறு தோறும் இரவு 8.00 மணிக்கு
Task.. Task.. ன்னு சொல்லி நீபாவ Ambulance ல ஏத்திட்டீங்களேப்பா!?Super Mom season 2ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு#SuperMom #Season2 #ZeeTamil
Posted by Zee Tamil on Tuesday, March 3, 2020