லாக் டவுன் நேரத்தில் தொகுப்பாளினி டிடி க்கு ஏற்பட்ட சோகம்!! வைரலாகும் புகைப்படம்!!

divya dharshini 1- tamil360newz

Vijay tv anchor DD leg fracture photo: விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரை பிறந்ததிலிருந்தே விஜய் தொலைக்காட்சிக்கு தத்து கொடுக்கப்பட்டார் என்றே கூறலாம் அந்த அளவுக்கு விஜய் டிவியில் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் என அனைவரும் தங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிடி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அந்தப் புகைப்படத்தில் டிடிக்கு காலில் அடிபட்டு கட்டு ஒன்று பெரிதாக போடப் பட்டுள்ளது. மேலும் அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்துவரும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லாக் டவுனில் என்னமோ ஆகிவிட்டது என்று பதறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

dd 1
dd 1