சினிமா உலகில் போட்டிகள் அதிகம் அதிலும் குறிப்பாக முதலிடத்தை பிடிக்க அஜித், விஜய் தொடர்ந்து போட்டி போடுகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின. இரண்டு திரைப்படத்திற்குமே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரே நாளில் படங்கள் வெளிவந்தன இதில் ஆரம்பத்திலிருந்து அஜித்தின் துணிவு கை ஓங்கி இருந்தது என்றே கூறலாம் ஏனென்றால் படம் முழுக்க முழுக்க ஆக்சன், சமூக அக்கறை, காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் இதில் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்களை கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்தனர்.
மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் சென்டிமென்ட் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு கவனம் ஈர்க்கவில்லை இதனால் கலவையான விமர்சனத்தை பெற்று வாரிசு திரைப்படம் ஓடியது ஆனால் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக தொடர்ந்து சமமான வசூலையே அள்ளி வந்தது.
இருப்பினும் நாட்கள் போகப்போக இரண்டு படத்தின் வசூல் மாறியது குறிப்பாக விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய உச்சத்தை தொட்டது. அஜித்தின் துணிவு திரைப்படம்.. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஹவுஸ்புல் ஆக ஓடினாலும் ஓட்டு மொத்தமாக 260 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
இருப்பினும் இரண்டு திரைப்படங்களுக்கும் கிடைத்த ஷேர் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது அதன்படி பார்க்கையில் விஜயின் வாரிசு திரைப்படம் 140 கோடிக்கு மேல் விற்கப்பட்டது ஆனால் மொத்தமாக ஷேர் கிடைத்தது 147 கோடி தான்.. நடிகர் அஜித்தின் துணிவு படம் 85 கோடிக்கு மேல் விற்கப்பட்டது ஆனால் ஷேர் கிடைத்தது 108 கோடி என சொல்லப்படுகிறது.