பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரட்சிதா வாங்கிய மொத்த சம்பளம் குறித்து வெளிவந்த தகவல்.!

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 6வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்நிகழ்ச்சி முடியிருக்கும் நிலையில் யார் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த சீசனில் ஏராளமான மக்களுக்கு பரிச்சயமான முகங்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமாகி பிறகு சரவணன் மீனாட்சி என்ற ஹிட் சீரியல் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் கடைசியாக கலர் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்த கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது இது பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இந்த சீரியலை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இதில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது மேலும் இவர் மிகவும் அமைதியாக கோபப்படாமல் இருந்து வந்த நிலையில் இவர் மிகவும் பொய்யாக நடிக்கிறார் என கூறி வந்தார்கள் மேலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ரட்சிதாவும் திடீர் திடீரென தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்து பிறகு கட்டுப்படுத்திக் கொள்வார்.

எனவே ரட்சிதா விரைவில் வெளியேறும் வேண்டும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இந்த வாரம் மக்கள் மத்தியில் மிக குறைவான வாக்குகளை பெற்று ரட்சிதார் வெளியேறியுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது மேலும் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 28 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.