தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெடுத்துள்ளவர் தான் விக்ரம். இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளதால்..
இவருடைய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சேது, பிதாமகன், ஐ, அந்நியன், கோப்ரா என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஆனால் இவர் சமீபகாலமாக நடித்த படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்க வில்லை.
இதனால் அவருடைய மார்க்கெட் தற்பொழுது கீழே இறங்கி உள்ளது இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் மிரட்டி விட்ட பிதாமகன் திரைப்படத்தில் நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம் 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான..
ஆக்சன், சென்டிமென்ட் நிறைந்த ஒரு படமாக இருந்தது படத்தில் விக்ரம் உடன் கைகோர்த்து சூர்யா, லைலா, மனோபாலா, கருணாஸ், சங்கீதா, மகாதேவன், தியாகராஜன், மொட்ட ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, டி பி கஜேந்திரன், ராஜேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன் என பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததற்காக விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்துதான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் அதன்படி பிதாமகன் படத்தில் நடிக்க விக்ரம் சுமார் 1.25 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது.