கமலஹாசன் நடிப்பில் உருவாகும் “இந்தியன் 2” படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

indian-2
indian-2

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தமிழ் சினிமா உலகில் நாம் எதிர்பார்க்காத பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்து வெற்றி கண்டுள்ளார் இவர் இதுவரை ரஜினி, கமல், விஜய், அர்ஜுன், விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கியவர்.

மீண்டும் உலக நாயகன் கமலஹாசன் உடன் கைகோர்த்து இயக்குனர் ஷங்கர் எடுத்த படம் இந்தியன் 2.. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்திலேயே சில பிரச்சனைகள் ஏற்பட சூட்டிங் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக டிராப்பானது பல வருடங்கள் தொடங்கப்படாமல் இருந்த இந்தியன் 2 படம்..

ஒரு வழியாக பிரச்சனைகள் எல்லாம் நல்லபடியாக முடிய தற்பொழுது ஷூட்டிங் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, சார்ஜ் மரியன், டெல்லி கணேஷ், யோகி பாபு ஆடுகளம் நரேன், ஜெய பிரகாஷ், மனோபாலா என பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த வருடத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட பட குழு பெரிய அளவில் திட்டம் போட்டு உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்து தற்போது தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த படம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது.

நடிகர் கமலுக்கு இது இரண்டாவது அதிக நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கிறது முதலில் இந்தியன் திரைப்படம் 3 மணி நேரம் 5 நிமிடம் இருந்த நிலையில் இந்தியன் 2 படம் 5 நிமிடம் அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் தாண்டி கமலின் ஹேராம் திரைப்படம் 3 மணி நேரம் 12 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.