தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இதுவரை மட்டுமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டுள்ளார் இப்பொழுதும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் இப்பொழுது ஜவான், கனெக்ட், நயன்தாரா 75, கோல்டு ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருப்பதால் நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பெரிதாக எதிர்பார்க்கப்படுவது கோல்டு திரைப்படம் தான்.
காரணம் இந்த படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதற்கு முன்பாக நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளதால் தற்பொழுது கோல்டு திரைப்படத்தை ரசிகர்களும், மக்களும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இந்தத் திரை படத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு பாடம், டீசர், ட்ரைலர் போன்ற எதுவுமே வெளிவரவில்லை ஆனால் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கோல்ட் திரைப்படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளிவந்து உள்ளது. கோல்ட் திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் மற்றும் என்ன சான்றிதழ் வாங்கி உள்ளது என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள். இந்த படம் யூ சான்றிதழ் வாங்கி இருக்கிறது இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தகவலை பிரித்விராஜ் வெளிப்படையாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.
#GOLD In theatres worldwide from 1st December 2022! An Alphons Puthren film! 😊❤️ @PrithvirajProd @magicframes2011 pic.twitter.com/WiAChaPUw4
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 28, 2022