கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 25 நாட்களில் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? காணாமல் போன பீஸ்ட்.

KGF
KGF

சமீபகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன அந்த வகையில் ராஜமௌலியை தொடர்ந்து பிரசாந்த் நீல் எடுக்கும் திரைப்படங்களும் வெற்றியை ருசிக்கின்றன. அப்படி கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2.

ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸ் ஆனது கே ஜி எஃப் 2 படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட், மாஸ் சீன்கள் என அனைத்தும் அதிகமாக இருந்ததால் இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடியது.

இதனால் படக்குழு எதிர்பார்க்காத வசூலை அள்ள ஆரம்பித்தது குறிப்பாக தமிழகத்தில் கேஜிஎஃப் 2 திரைப் படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது தவிர குறைந்தபாடில்லை. கே ஜி எஃப் 2 திரைப்படம் 25 நாட்களை தொட்டு விட்டது இப்பொழுது வரை தமிழகத்தில் மட்டுமே சுமார் 115 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர்களின் படங்கள் கூட தமிழ்நாட்டில் 100 கோடியை தொட அல்லாடுகிறது ஆனால் பிற மொழிப் படமான கேஜிஎப் 2 அசால்டாக வெறும் இருபத்தி ஐந்து நாட்களிலேயே 115 கோடியை ஆழியது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது சொல்ல வேண்டுமென்றால் அண்மையில் வெளியான விஜயின் 65வது திரைப்படமான பீஸ்ட் படம் கூட இவ்வளவு வசூலை அள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக கே ஜி எஃப் 2 திரைப்படம் இதுவரை 1115 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த திரைப் படத்திற்கான வரவேற்பு கூடுதலாக இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் உலக அளவில் 1300 கோடி வசூலிக்கும் என தெரியவருகிறது.