விஜயின் “பீஸ்ட்” படம் 50 நாட்களில் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.!

vijay-
vijay-

தளபதி விஜய் அண்மை காலமாக தொடர் வெற்றி படங்களில் நடித்து வருகிறார் இவர் மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்தார். இவர் தமிழ் சினிமா உலகில் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் ஆகிய இரு வெற்றிப்படங்களை கொடுத்த..

நிலையில் மூன்றாவது முறையாக நெல்சன் இயக்கத்தில்  தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். பீஸ்ட் படம் ஆரம்பத்தில் இருந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.

இருப்பினும் தொடர்ந்து ஓரளவு கணிசமான வசூலை அனைத்து ஏரியாக்களிலும் அள்ளி கொண்டு இருந்தது. மேலும் வெளிநாடுகளில் மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூலை அள்ளி வந்ததற்கு காரணம் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி ஓரளவு மற்ற இடங்களிலும் ரசிகர்கள் இருந்தனர்.

அதனால் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலை அள்ளியது 50 நாட்கள் முடிவில் பீஸ்ட் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில்  உலக அளவில் இதுவரை 227 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டுமே 120 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.