உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

udhayanithi-stalin
udhayanithi-stalin

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அருண்ராஜா காமராஜ். இயக்குனராக முதலாவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் படம் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.   படம் தமிழில் சிறப்பாக இருந்துள்ளதால் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து பிக்பாஸ் சக்கரவர்த்தி, இளவரசு போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.

இதுவரை காமெடி மற்றும் குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது இந்த படம் முழுக்க முழுக்க சமூக கருத்துக்களை எடுத்துரைக்கும் அதேசமயம் ஜாதிகள் குறித்தும் சில கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக இது இருந்துள்ளது.

இப்படம் உதயநிதி ஸ்டாலின்னுக்கு மிக முக்கியமான படமாக தற்போது பார்க்கப்படுகிறது. திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாட்கள் செல்லச் செல்ல இந்தப் படத்தின் வசூலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுவரை நெஞ்சுக்கு நீதி திரைப்படம் 12 கோடி வசூல் செய்துள்ளதாம். ஷேர் மட்டுமே 6 கோடி கிடைத்துள்ளதாக நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்த நடிகர் இளவரசு படத்தின் வெற்றி விழாவின் போது இது குறித்து விவரமாக பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.