அர்ஜுன் மிரட்டிவிட்ட “முதல்வன்” திரைப்படத்தின் மொத்த வசூல் இதனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

mudhalvan
mudhalvan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருவர் ஷங்கர். இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை எடுத்து வெற்றி கொண்டிருக்கிறார். முதலில் ஜென்டில்மேன் என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ் என அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றி கண்டதால்..

இவரது மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தை இயற்றியது அதன் பிறகு தான் ரஜினியுடன் கைகோர்த்து  சிவாஜி தீ பாஸ், 2.0, எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களை கொடுத்தார். இவை அனைத்துமே எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளிக் குவித்தது இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஷங்கர் ராம் சரணை வைத்து rc 15 என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

தமிழில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. ஷங்கர் சினிமா உலகில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவருடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இன்று வரையிலும் பார்க்கப்படுவது “முதல்வன்” தான்.. இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது.

படம் அரசியல்வாதிகள் மக்களை எப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி இருந்தது இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா, விஜயகுமார் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

படத்தின் வெற்றியால் அர்ஜுனுக்கும் சரி, ஷங்கருக்கும் சரி திரை உலகில் வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தன. இப்படி இருக்கின்ற நிலையில் முதல்வன் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்து எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் முதல்வன் திரைப்படம் அப்பொழுது வெளிவந்து உலக அளவில் 44.91 கோடி வசூல் செய்ததாம். இதில் இந்தியாவில் மட்டுமே 38.4 கோடியை வெளிநாடுகளில் 6.51 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.