ஆர்வம் இருக்கின்றவர்கள் சினிமா உலகில் கால் தடம் பதித்து அசத்துகின்றனர் அந்த வகையில் சரவணா ஸ்டோர் ஓனர் இளம் வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்து வந்துள்ளது. அதற்கான காலம் அமையாமல் இருந்ததால் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் ஜேடி ஜெர்ரி சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் துணிந்து நடித்தார். மேலும் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் நடித்த முதல் படத்திற்கு தி லெஜெண்ட் என பெயர் வைக்கப்பட்டது. படம் ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சரவணன் அவர்களுடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, யோகி பாபு, விவேக் மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடித்து அசத்தியுள்ளனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்து படமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் செய்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூலை செய்துள்ளது இதுவரை தி லெஜண்ட் திரைப்படம் 10 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே சுமார் 10.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படத்திலேயே நல்ல வசூலை கண்டுள்ளதால் சரவணன் அருள் தற்போது சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி இது ஒரு புதிய சாதனை படைக்கும் என தெரிய வந்துள்ளது.