தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அசால்டாக 200 கோடி ரூ 300 கோடி வசூல் செய்திருக்கிறது. அதேபோல இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க..
நடிகர் ரஜினி நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் திரைப்படத்தில் விருவிருப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடித்த ஒரு படம் குறித்து விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் தளபதி.
இந்த படம் முழுக்க முழுக்க நட்பு, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக உருவாகியது. படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஷோபனா, மம்முட்டி, ஸ்ரீவித்யா, அரவிந்த்சாமி, பானுப்பிரியா, நாகேஷ் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அப்பவே பல கோடி அள்ளி திரை உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த படம் தளபதி.. அப்பவே இந்தப் படத்தின் மொத்த வசூல் 13 கோடி. இந்தியாவில் மட்டுமே 10. 60 கோடி வசூல் செய்தது. வெளிநாடுகளில் 2.30 கோடி வசூல் செய்தது.
ஒட்டுமொத்தத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று 90களில் அதிக ஹிட் மற்றும் வசூல் படங்களை கொடுத்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் ரஜினியின் மவுஸ் இன்று வரையிலும் குறையவில்லை மேலும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என சொல்வதற்கு இது போன்ற காரணங்களும் உண்டு..