நடிகர் சந்தானம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானார் ஒரு சமயத்தில் இவருக்கு வெள்ளி திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து நன்றாக ஓடிக் கொண்டிருந்த இவருக்கு அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் காமெடியனாக நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் சினிமா உலகில் வெற்றியை மட்டுமே சம்பாதித்த சந்தானத்திற்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையும் வந்தது.
அந்த வகையில் காமெடி கலந்த கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிகர் ஆரம்பித்தார். முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்தார் முதல் படமே வெற்றி படமாக மாறியதால் அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும் அதே சமயம் தனது முழு திறமையையும் காட்டி நடித்ததால்..
அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது சொல்லப்போனால் சந்தானம் நடித்த படங்கள் நல்ல வசூலை கண்டுள்ளன. இப்போது கூட இவர் நடிப்பில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளே கோடிகளை வசூல் அள்ளி சாதனை படைத்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் குலு குலு திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் சுமார் 4.2 கோடி வசூல் செய்துள்ளதாம். வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் எதுவும் வராததால் சந்தானத்தின் குலு குலு திரைப்படம் நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.