இயக்குனர் மணிரத்தினம் திரை உலகில் பல காதல் ஆக்சன் சென்டிமென்ட் என பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவரது கனவு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான்..
இதற்காக இரண்டு மூன்று தடவை முயற்சி செய்து தோல்வியை சந்தித்தாலும்.. கடைசியாக பக்காவாக பிளான் போட்டு மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பொருள் செலவில் எடுத்தார் படம் நீளமாக இருந்த காரணத்தினால்..
இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இப்பொழுதும் இந்த படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர் அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் பட்டையை கிளப்பியது இதுவரை மட்டுமே தமிழகத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம்..
சுமார் 500 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்திருக்கிறது. படத்தில் மொத்த பட்ஜெட் 500 கோடி தான் அதில் முதல் பாகமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதால் பட குழுவும் சரி, இயக்குனர் மணிரத்தினமும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இந்த திரைப்படம் நிச்சயம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என சொல்லப்படுகிறது.