அண்மைகாலமாக நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் பிரம்மாண்ட வசூலை அள்ளி சாதனை படைக்கின்றனர் இதனால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயனுடன் நெல்சன்னுடன் கூட்டணி அமைத்து டாக்டர் படத்தில் நடித்தார்.
இந்த படம் 100 கோடிக்கு மேல் தாண்டி வசூலில் புதிய சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து சிபிச்சக்கரவர்த்தி உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்தய் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பிரியங்காவும் மோகன், சூரி, சிவாங்கி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த திரைப்படமும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வசூலை அள்ளி வருகிறது அந்த அளவிற்கு படம் காமெடி சென்டிமென்ட் கலந்த படமாக இருப்பதால் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதுவரை 60 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது தமிழகத்தில் ஏழு நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் 7 நாள் முடிவில் டான் படம் சுமார் 46 கோடி அள்ளியே புதிய சாதனை படைத்துள்ளது.
டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் படமும் வெளியாக இருக்கிறது தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளிவந்து வெற்றி பெறும் பட்சத்தில் அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன் வருவார் என கூறப்படுகிறது அந்த அளவிற்கு அவரது சினிமா பயணம் உயர்ந்து உள்ளது என சினிமா சினிமா வட்டாரத்தில் இருக்கும் பிரபலங்கள் கூறிவருகின்றனர்.