தமிழகத்தில் மட்டும் அருண் விஜயின் “யானை திரைப்படம்” – அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

yaanai-
yaanai-

17 வயதிலே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் அருண் விஜய் ஆனால் இளம் வயதில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் அருண் விஜயின் சினிமா பயணம் அதோடு முடிந்தது என பேசப்பட்டது ஆனால் தன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ரோலில் பின்னி பெடலெடுத்தார் அதன் பின் இவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது அதன் பிறகு அருண் விஜய் நடித்த தடம், குற்றம் 23 ஆகிய படங்கள் இவரை திருப்பி பார்க்க வைத்தது தற்பொழுது இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த வகையில் அக்னி சிறகுகள், சீனம், பாக்சர் மற்றும் பல படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் கைகோர்த்து நடித்து வெளிவந்தது  யானை திரைப்படம்.இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

யானை படம்  சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது படம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளிலும் உலகம் முழுவதும்.

1600 திரையரங்குகளிலும் வெளியானது இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 12.5 கோடி வசூலித்து உள்ளதாம்.. வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வசூலை அள்ளும் என படக்குழு கணக்கு போட்டு உள்ளது.