kadhal kottai : தமிழ் சினிமாவில் இன்று வெற்றி நாயகனாக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் இதுவரை 60 வதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கூட வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது அதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவும் அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.
படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார் என கூறப்படுகிறது இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அஜித்தின் நடித்த ஒரு படம் 27 வருடங்கள் ஆகியும் இன்றும் பேசப்படுகிறது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் “காதல் கோட்டை” இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார் அவர்களுடன் இணைந்து ஹீரா ராஜகோபால், பாண்டு, தலைவாசல் விஜய், மணிவண்ணன், கரன், சபிதா ஆனந்த்..
மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க அஜித் – தேவயானி பார்த்துக் கொள்ளாமலே காதலிப்பார்கள் அதுதான் படத்தின் பெரிய பிளஸ் கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் கதை அதேசமயம் இந்த படத்தில் காமெடியும் வேற லெவலில் இருக்கும்..
படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது ஒட்டுமொத்தமாக காதல் கோட்டை திரைப்படம் உலக அளவில் 10 கோடி வசூல் செய்தது அன்றைய காலத்தில் இது பெரிய சாதனை. காதல் கோட்டை திரைப்படம் இத்துடன் வெளியாகிய 27 வருடங்கள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.