நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த மாதம் 13ம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது. டாக்டர் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும்.
சிறப்பாக பொருந்தியதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்து உள்ளது டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சமுத்திரகனி, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.
படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் வசூலிலும் பட்டையை கிளப்புகிறது முதல் வாரத்திலேயே 50 கோடி உலக அளவில் வசூல் செய்ததால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் முதல் வாரத்திலேயே டான் படம் போட்ட காசை எடுத்து விட்டது.
இனி வருகின்ற நாட்களில் வசூல் எல்லாமே லாபமாகதான் அமைந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் டான் திரைப்படம் ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்த்தால் தமிழகத்தில் மட்டுமே 5 நாட்களில் 38 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிச்சயம் 100 கோடி கிளப்பில் சேரும் என்பதோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி வசூல் அள்ளும் என கூறப்படுகிறது இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது சொல்லபோனால் அஜித் விஜய்க்கு நிகராக பயணிக்க ரெடியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரங்கள் சேர்ந்த பலர் கூறி வருகின்றனர்.