கோபத்துல சொன்ன தலைப்பு தான்.. தனுஷ் படத்துக்கு பிளஸ்ஸாக மாறியது.? ரகசியத்தை உடைக்கும் வெற்றிமாறன்

dhanush-
dhanush-

சினிமா மீது உள்ள காதலால் பலரும் பல வருடங்களாக காத்திருந்து எப்படியாவது பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்கின்றனர் ஆனால் ஒரு சிலர் வேண்டா வெறுப்பாக சினிமாவில் முதலில் நடித்து தற்பொழுது பெயரையும், புகழையும் பெற்றிருக்கின்றனர் அப்படி ஆரம்பத்தில் நடிகர்  தனுஷுக்கு நடிக்கவே பிடிக்கவில்லையாம் அவருக்கு வேறு ஆசைகள் இருந்தது.

ஆனால் அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமா தான் தனக்கு எல்லாம் என்பதை உணர்ந்து கொண்ட தனுஷ் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தற்போது திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகவும் இருக்கிறார் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்..

அடித்த நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் தனுஷ்க்கு வெற்றியை வாங்கி தரும் என பலரும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் மற்றும் பொல்லாதவன் படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

பொல்லாதவன் படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு எல்லாம் முடித்துவிட்டு இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம் முதலில் பொல்லாதவன் படத்திற்கு இரும்பு குதிரை என பெயர் வைக்க முடிவு செய்து தயாரிப்பாளரிடம் கூறினார்.

அதற்கு தயாரிப்பாளர் “தம்பி என்ன ஊரு” என பெயர் வைத்து விடலாம் எனக் கூற கோபத்தில் வெற்றிமாறன் அதற்கு பொல்லாதவன் என பெயர் வைத்து விடலாம் எனக் கூற தயாரிப்பாளரிடம் சொல் இது நன்றாக இருக்கு இருந்தாலும் தனுஷிடம் ஒரு தடவை சொல்லிவிடலாம் என இருவரும் சேர்ந்து பொய் சொல்லி உள்ளனர். தனுஷும் பொல்லாதவன் தலைப்பு சூப்பராக இருக்கிறது ரஜினி சாரிடம்  ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என கூறிய கடைசியாக பொல்லாதவன் என முடிவு செய்தனர்.