நயன்தாரா, ஷாருகான் இணையும் படத்தின் தலைப்பு.? ஒரு விலங்கின் பெயரா.? வித்தியாசத்தை தேடும் இயக்குனர் அட்லீ.

nayanathara-and-sharukha
nayanathara-and-sharukha

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே நானும் சிறந்த இயக்குனர் என்பதை மக்களுக்கு புரிய வைத்தார். பிறகு தளபதி விஜயுடன் தொடர்ந்து கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் போன்ற போன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து.

முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் கவனிக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அதன் விளைவாக தற்போது மற்ற மொழிகளுக்கும் இவருக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வகையில் ஹிந்தி சினிமாவில் கிங்காங் என அழைக்கப்படும் டாப் நடிகரான ஷாருக்கானுடன் முதல் முதலாக அவருக்கு ஒரு கதையை சொல்லி கைகோர்த்து உள்ளார்.

இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் யோகிபாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைய உள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் உள்ள ஒரு மெட்ரோ ரயிலில் தண்டவாளத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வில்லனாக பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா டகுபதி இந்த படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது இதில் ஷாருக்கான் இரண்டு கதாபாத்திரத்தில் மிரட்ட இருக்கிறாராம். கதைக்கு ஏற்றவாறு டைட்டில் வைக்க படக்குழு பல்வேறு தலைப்புகளை வைத்து வந்தது.

அந்த வகையில் முதலில் “ஜவான்” என தலைப்பு வைத்து அதை தற்பொழுது தூக்கிவிட்டு அந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு புதிய பெயரைத் தேர்ந்தெடுத்து உள்ளது படக்குழு. அந்த வகையில் இந்த படத்திற்கு lion என்று தலைப்பு வைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் சைடில் இருந்து புறப்படுகிறது.