AK 61 படத்தின் தலைப்பு இதுவா.? மீண்டும் “V” சம்பந்தப்பட்ட பெயரையே வைக்கும் படக்குழு.!

ajith 61
ajith 61

நடிகர் அஜித்குமார் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது ரசிகர்கள் அஜித் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்துகின்றனர் அதற்கு ஏற்றார் போல் அவரும் அண்மை காலமாக சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து படங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் நாளுக்கு நாள் அவரது சினிமா பயணம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதற்கு ஏற்றார்போல சம்பளத்தையும் உயர்த்தி வெற்றி கண்டு வருகிறார். வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக சிறப்பாக இயக்க ஹெச் வினோத் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இந்தப் படத்தில் நடிப்பவர்களில் அஜித்தை தவிர வேறு யாரும் அதிகாரபூர்வமாக படக்குழு சொல்லவில்லை என்றாலும் ஒரு சில பெயர்கள் அடிபட்டு கொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த john kokken மற்றும் பலர் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 61வது திரைப்படத்தை இந்த வருடமே கொடுக்க இருப்பதால் படத்தை வெறும் 75 நாட்களிலே எடுத்து முடிக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த படம் தீபாவளிக்கு வெளியிட அஜித்தும் தயாரிப்பாளரும் முடிவு செய்து உள்ளனர் அது அதிகாரப்பூர்வமாக கூட போனிகபூர் அறிவித்தார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடமே அஜித்தின் இன்னொரு படம் வெளிவர இருப்பதால் அவரது ரசிகர்களுக்கு செம உற்சாகத்தில் இருக்கின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை வைத்து உருவாகும் என கூறப்படுகிறது இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது இந்த படத்திற்கு எந்த மாதிரியான தலைப்பு வைக்க உள்ளனர்.

என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது அண்மைகாலமாக அஜித்துக்கு வி சம்பந்தப்பட்ட எழுத்துக்களை படத்தின் டைட்டிலாக வைக்கின்றனர் அதுவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது அந்த வகையில் அஜித்தின் 61 வது திரைப்படத்திற்கு “வீரா” என பெயர் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.