சினிமா உலகில் போட்டிகள் எப்பொழுதுமே இருக்கும் அந்த வகையில் சிவாஜி எம்ஜிஆர் ஆகியவர்களை தொடர்ந்து ரஜினி கமல் இருவருமே சினிமா உலகில் படங்களின் மூலம் போட்டி போட்டுக் கொள்கின்றனர் ஆனால் நிஜத்தில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் அதை பல மேடைகளில் கமலும் ரஜினியுமே சொல்லி இருக்கின்றனர்.
ஏன் பொன்னியின் செல்வன் விழாவில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி கமல் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இதுவரை அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது.
போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்பொழுதும் கூட நல்ல கதைகளம் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிக்க ரெடியாகத்தான் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் ரஜினி கமல் பற்றி கூறியுள்ளார் அதாவது கமலஹாசன் ஒரு திரைப்படத்திற்கான ஒன் லைன் கதையை கூற..
அதனை கேஎஸ் ரவிக்குமாரும் வசனகர்த்தா கிரேசி மோகனும் இணைந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கின்றனர் இந்த விஷயம் ரஜினிக்கு தெரிய வர.. இந்த திரைப்படத்திற்கு தெனாலி என பெயர் வையுங்கள் என இயக்குனர் ரவிக்குமாரிடம் சொல்லிவிட்டார் இந்த டைட்டிலை கமலிடம் சொல்ல அவருக்கு பிடித்துப் போகவே பின் படத்திற்கு தெனாலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் வெற்றி விழாவின்பொழுது ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர் அப்பொழுது விழாவில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்திற்கு தெனாலி என்று பெயர் வைத்தது ரஜினி சார் தான்.. இது எனக்கும் கிரேசி மோகனுக்கு மட்டும்தான் தெரியும்.. இதைக் கேட்ட கமலஹாசன் ஷாக் ஆகிவிட்டாராம் அருகில் அமர்ந்திருந்த ரஜினி இடம் நீங்கள் தான் இந்த டைட்டிலை சொன்னதா என கேட்டு இருவரும் நட்பு பாராட்டிக் கொண்டார்கள்..