தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “துணிவு திரைப்படம்” மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியால் சந்தோஷம் அடைந்த அஜித் உடனே ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை சுத்தமாக படக்குழுவுக்கு பிடிக்காமல் போனதால் அவரை நீக்கிவிட்டு ஒரு வழியாக இயக்குனர் மகிழ் திருமேனியை கமிட் செய்து உள்ளது இவர் இதுவரை எடுத்துள்ள படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் என்பதால் தற்போது ஏகே 62 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
அண்மையில் கூட படக்குழு பூஜையை போட்டு வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் என தெரிய வருகிறது. படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார், அஜித்தை தவிர மற்றபடி யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை..
ஆனால் ஒரே ஒரு பேச்சு மட்டும் வைராலாகி கொண்டிருக்கிறது அதாவது அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள் நிதி நடிக்க வைப்பதா என்ற ஒரு டாக் தான்.. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் “ஏகே 62” திரைப்படத்திலிருந்து எந்த மாதிரியான டைட்டில் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது துணிவு திரைப்படத்தில் அஜித் டார்க் டெவில் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்ததார் மேலும் அந்த பெயர் பெரிய அளவில் வைரலானதால் தற்பொழுது AK 62 படக்குழு டைட்டில் “டெவில்” அல்லது “டார்க் டெவில்” பெயர் வைக்க யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.. மகிழ் திருமேனி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து செய்து வருகிறார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.