ஐபிஎல் 15 வது சீசன் ஏப்ரல் மாதத்தில் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது அதற்கான அட்டவணைகள் கூட தற்போது வெளிவந்துள்ளன இதுவரை 8 அணிகள் மோதிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாட இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ஆட்டமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அண்மையில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டது இதில் புதுமுக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டு ஐபிஎல் – லில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 19 வயது இளம் வீரரான திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார் இவர் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் அந்த அளவிற்கு திறமையான வீரராக பேசப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் திலக் வர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை புகழ்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடு வேண்டும் எனது சிறுவயது ஆசையை அந்த அணியில் சச்சின், ரோகித் சர்மா போன்ற சிறந்த வீரர்களின் பேட்டிங்கை பார்த்து தான் நான் வளர்ந்து உள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதுமே ஒரு ஆச்சரியமாக இருக்கும் அணி அந்த அணியை பல்வேறு பதட்டமான சூழ்நிலை சிறப்பாக கையாண்டு கோப்பை ஐந்து முறை அள்ளியுள்ளது.
அதேசமயம் அந்த அணி புதிய புதிய வியூகங்களை அணுகி வெற்றியை பெறுவதற்கான வழியைத் தேர்ந்தெடுக்கும் அதனால் அந்த அணியுடன் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய ஒரு நம்பிகையை இப்பொழுதும் என கூறினார். அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி சென்னை அணியை வீழ்த்துவது எனது மிகப்பெரிய ஆசை என தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக விளையாடிய அந்த அணியை தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்பதே எனக்கு இலக்கு என கூறி உள்ளார். இதனை கண்ட சென்னை ரசிகர்கள் இன்னொரு ஐபிஎல் கூட விளையாட அதுக்குள்ளேயே இவ்வளவு நம்பிக்கையா எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.