Bigg Boss season 7 Nomination: பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி இந்த வாரம் முதல் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா ராவ் வெளியேறியுள்ளார். இவரை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது அதில் சிக்கி இருக்கும் போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேஷன் நடைபெறுவது வழக்கம் அதில் இடம்பெறுபவர்கள் மக்கள் ஓட்டுக்கு அனுப்பப்பட்டு குறைவான வாக்குகளை பெறுபவர்கள் வாரத்தின் இறுதியில் வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.
அப்படி திங்கட்கிழமையான இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் சற்று முன்பு நடைபெற்றுள்ளது. அதில் மொத்த போட்டியாளர்களும் மூன்றே மூன்று போட்டியாளர்களை குறி வைத்து நாமினேஷன் செய்திருப்பது ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.
அப்படி பெரும்பாலானோர் விஷ்ணுவை நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் அனைத்து போட்டியாளர்களும் கிட்டத்தட்ட விஷ்ணு பெயரை தான் கூறியுள்ளனர். இது விஷ்ணுவுக்கும் தெரிய வர அவரே மொத்தவிடும் தனக்கு எதிராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இவர் அடுத்து இரண்டாவதாக மாயாவை நாமினேஷன் செய்துள்ளனர் குறிப்பாக ரவினா மாயா இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி நாமினேஷன் செய்துள்ளார். மூன்றாவது போட்டியாளராக அக்சயா இவர்கள் மூவரையும் தான் அதிகமாக நாமினேஷன் செய்துள்ளனர். விஷ்ணு அக்சயாவை நாமினேஷன் செய்துவிட்டு இந்த வீட்டிற்கு சுற்றுலா வந்த மாதிரி ஓபி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இவ்வாறு மொத்த போட்டியாளர்களும் விஷ்ணு, மாயா மற்றும் அக்சயா இவர்கள் மூவரையும் தான் குறி வைத்து நாமினேஷன் செய்துள்ளனர்.