ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கும் திரைப்படம் தான் வலிமை தல அஜித் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் இன்னும் 10 சதவீதக் படக்காட்சி முடியாமலிருக்கின்றது ஏற்கனவே வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறி ரசிகர்கள் பலரையும் வருத்தத்தில் படக்குழுவினர்கள் ஆழ்த்தி விட்டார்கள்.
வலிமை படத்தை பற்றி புதிதாக ஒரு அப்டேட் வெளிவருமா என பல ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது அந்த திரைப்படத்தில் நடித்து வரும் ஒரு பிரபலம் ஒரு தகவலை பகிர்ந்துள்ளாராம் ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜானகி ஒரு சில தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளாராம்.
இவர் வலிமை திரைப்படத்தில் அஜித்தின் அண்ணியாக நடித்துள்ளாராம் மேலும் அம்மாவாக சுமித்ரா நடித்து உள்ளார் என தகவல் வைரலாகி வருகிறது ஜானகி வலிமை படத்தை பற்றி ரசிகர்களிடம் கூறியது என்னவென்றால் ஹைதராபாத்தில் இரவு நேர காட்சிகள் எடுக்கும் போது அங்கு அதிகமாக குளிருமாம் அந்த நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் நடுங்கி விடுவார்களாம்.
அப்பொழுது தல அஜித் மட்டும் தனியாக தனது கேரவனிலேயே அனைவருக்கும் சூடாக சிக்கன் சூப் வைத்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டாராம் அந்த நேரத்தில் சூடாக எது குடித்தாலும் படக்குழுவினர்களுக்கு சந்தோசமாக இருக்குமாம் அந்த நேரத்தில் அஜித் செய்த விஷயம் அனைவரையும் நெகிழ வைத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளாராம்.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தல அஜித்னா சும்மாவா யாருக்கு எப்படி எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து வைத்திருப்பார் எங்கள் தல அஜித் என சமூக வலைதளப் பக்கங்களில் இவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.