பீஸ்ட் திரைப்படத்தில் இந்த காட்சி வரும் பொழுது திரையரங்கமே அதிரும்…! சீக்ரெட் உடைத்த தயாரிப்பாளர்

beast-1
beast-1

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், கவின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

முதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டார்கள் படக்குழு அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல பிரபலத்தை பெற்றது. அதுமட்டுமில்லாமல் பல ரசிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் ரில் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள். அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆனது.

மேலும் சமீபத்தில் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் படக்குழு இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறது படக்குழு.

இந்த நிலையில்  இந்த திரைப்படம் பற்றி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறியது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது இந்த திரைப்படத்தைப் பற்றி நான் கேள்விபட்டது என்னவென்றால் விஜய் சார் இதுவரை எந்தவொரு திரைப்படத்திலும் பண்ணாத அளவிற்கு இந்த திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் அசத்தியுள்ளாராம். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் செம மாஸ் ஆக இருக்கும் எனவும் அதிலும் ஒரு மாஸ் காட்சி வரும் பொழுது திரையரங்கு அதிரும் எனவும் கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் அந்தக் காட்சி முடிந்த பிறகு திரையரங்கில் பத்து நிமிடங்களுக்கு கைதட்டல் குறையாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனவும் கூறியுள்ளார்.