தளபதி 67 திரைப்படத்தின் வில்லனுக்கு இத்தனை கோடி சம்பளமா.? விஜய்சேதுபதியையே ஓவர்டேக் செய்வார் போல

thalapathy
thalapathy

வெற்றி மேல் வெற்றியை கொடுத்து ஓடி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் அவருக்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் ஆக்சன் காமெடி என அனைத்தும் கலந்து இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார் இயக்குனர் வம்சி இந்த படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பட குழு நகர்ந்து உள்ளது. இப்படி இருந்தாலும் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றனர். அதனால் பட குழு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 படம் உருவாக இருக்கிறது அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் நடிக்க இருக்கிறார்.

அந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது இதனால் இந்த படத்தில் விஜயின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக மொத்தம் 5 அல்லது 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதில் மெயின் வில்லனாக பாலிவுட் சினிமாவை அலற விட்டு வரும் சஞ்சய் தத் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

இதற்கு அவர் 15 கோடி சம்பளம் கேட்க ஒரு வழியாக பேசி 10 கோடி கொடுக்க படகுழு முடிவு எடுத்துள்ளது அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் கே ஜி எஃப் மாதிரி இந்த படத்தில் அவர் மிரட்டுவதில் எந்த ஒரு குறையும் இருக்காது என சொல்லப்படுகிறது.