தல தான் எப்பவும் முதலிடம் விஜய்க்கு எட்டாவது இடம் வெளியானது சர்வே ரிப்போர்ட்.!

thala
thala

இந்தியாவில் பல மொழியான திரைப்படங்கள் ஆண்டுதோறும் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகின்றன அந்த வகையில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி ஒரிசா போன்ற பல மொழிகளில் படங்கள் வெளிவருகின்றன குறிப்பாக அந்தந்த மொழி காரர்களுக்கு அவர்களுக்கு பிடித்த நடிகரை தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் இணையதளமும் ஆண்டு தோறும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் விரும்பும் நடிகர் யார் என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது  அந்த வகையில் 2020இல் தமிழில் அதிகம் விரும்பப்படும் நடிகர் யார் என்று கருத்து கணிப்பு சமீபத்தில் வெளிவந்தது இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகள் இதோ இதில் முதல் 25 இடங்களை பிடித்த நடிகர் பற்றி இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை நடிகர் அஜித் பிடித்துள்ளார். அஜித் இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு நான்காவது இடத்தையும் 2018ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்பொழுது 2020 ஆம் ஆண்டு முதல் இடத்தை பிடித்திருக்கிறார் இதன் மூலம் அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன.

இரண்டாவது இடத்தை நடிகர் சூரியா பிடித்துள்ளார்.கடந்த ஆண்டு சூர்யா இதே இடத்தில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தனுஷ், விக்ரம், ஆர்யா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்து உள்ளனர் அதர்வா கடந்த ஆண்டு 25 வது இடத்தில் இருந்த இவர் தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நடிகர் விஜய் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார் ஆனால் இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலில் அஜித்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது ஒட்டி அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷமாக இருந்து வருகின்றனர் மேலும் டுவிட்டரில் தல அஜித் ரசிகர்கள் # ஒன்றை உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கிவருகின்றனர் #ThalaAjithTheMostDesirableMan இந்த ஹேஷ்டேக் இந்தியாவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.