நள்ளிரவில் பாத்ரூம் போகப் போன இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து அரசு ஊழியர் அட்டூழியம்.!

girls
girls

சேலம் அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் பாத்ரூம் போவதற்காக வெளியே வந்துள்ளார் அப்பொழுது அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து தவறாக நடந்து கொள்ளலாம் என அழைத்த அரசு ஊழியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் அடுத்து பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இந்த இளம் பெண்ணுக்கு காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் தனது கணவர் உட்பட குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது இரவு 11 30 மணியளவில் பாத்ரூம் போவதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்பொழுது எதிர்வீட்டில் வசித்து வந்த அரசு ஊழியர் மணிகண்டன் என்பவர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து உள்ளே வா இருவரும் தப்பு பண்ணலாம் என வெறித்தனமாக இழுத்துள்ளார் இதனை ஒப்புக் கொள்ளாத அந்த இளம்பெண் அலறியடித்து கூச்சலிட்டு உள்ளார். உடனே அந்த இளம் பெண்ணின் கணவர் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் அரசு ஊழியர் மணிகண்டன்.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அனைவரும் எழுந்து வந்து உடனே அரசு ஊழியர் மணிகண்டனை பிடிக்க முயற்சித்தார்கள் ஆனால் மணிகண்டன் தப்பி ஓடினார் இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

தீவிர விசாரணையில் மணிகண்டனை உடனடியாக கைது செய்தார்கள் இளம்பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டதற்காக இவரை உடனடியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார் அரசு ஊழியர் மணிகண்டன் ஏற்காடு மாரங்கலதில் உள்ள பழங்குடியினர் மாணவர் விடுதியில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.