அடுத்தகட்ட படபிடிப்பை ஆரம்பித்த சூர்யா 42 படக்குழு.!

surya 42
surya 42

இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா ஒரு சில பிரச்சனையின் காரணமாக அந்தப் படத்தை பாதியிலேயே கைவிட்டார். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கம் சூரியன் 42 திரைப்படத்திற்காக முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நடிகர் சூர்யா.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த திஷா பதானி நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கோவாவில் எடுக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய பட குழுவினர் சூர்யா இல்லாத காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று இவிபி ஸ்டுடியோவில் சூர்யா 42 படத்திற்கான அடுத்தகட்ட படபிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படப்பிடிப்பில் சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் இணைந்துள்ளனர் இவர்களுடைய காட்சிகள் தான் இன்றிலிருந்து தொடங்கி படமாக்கப்பட்டு வருகிறது. சூர்யா 42 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க வருகிறார்.

இந்த படத்திற்கான பயிற்சிகள் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது ஆனால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அந்த பாடம் பாதையில் நிறுத்தப்பட்டது.

பின்னர் வணங்கான்  திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் வாடிவாசல் திரைப்படத்தில் தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சூர்யா அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கம் சூரியா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.