மணிரத்தினம் இயக்கத்தில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் பொன்னியின் செல்வர் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இந்த இரண்டு பாகங்களையும் இயக்குனர் மணிரத்தினம் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா பிரபு, சரத்குமார்,விக்ரம் பிரபு ,கிஷோர், ஜெயராம், லால், ரகுமான், அஸ்வின் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் விக்ரமும், வைத்திய தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் நடித்திருக்கின்றனர். ஸ்ரீதர் பிரசாத் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என்ற தகவல் வெளியானது. மேலும் ரவி வர்மன் ஐஎஸ்சி இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்து உள்ளார்.
ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க ஜெயமோகன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். லைக்கா மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது முதல் பாகமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் சிங்கிள் பாடல் அண்ட் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சோழா சோழ நாளை மாலை 6:00 மணி அளவில் வெள்ளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது மேலும் விக்ரம் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது போர் பின்னணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.