ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டுமே பல கோடி செலவு செய்த “லியோ” படக்குழு..! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

படத்தை லோகேஷ் தரமாக எடுத்து வருகிறார். இவர் இதுவரை எடுத்த படங்களில் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் இருக்கும் அந்த வகையில் லியோ படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது  லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது என தகவல்கள் வெளிவருகின்றன.

இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு youtube -ல் நான் ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுவரை மட்டுமே 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை அளித்துள்ளது. இதே நிலையில் விஜய் மற்றும் லியோ படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதள பக்கங்களில் உலா வுகின்றன அதன்படி தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்..

லியோ படம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே படக்குழு சுமார் 10 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதில் இடம்பெறும் VFX  காக இந்த தொகையை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த  சண்டை காட்சி திரையரங்குகளில் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்குமாம்.. படத்தில் இந்த ஒரு சண்டை காட்சி மட்டும் கிடையாது இதுபோல பல சண்டை காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது எனவே லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது.