சந்திரமுகி முதல் பாகத்தை ஓவர்டேக் செய்ய முன்னணி நடிகையை களமிறக்கும் படக்குழு.! அட இந்த நடிகையா.?

chandramukhi-2
chandramukhi-2

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் அசுர வெற்றியை அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி 800 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி அபார சாதனை படைத்தது. அது மட்டும் அல்லாமல் 1999 இல் வெளியான படையப்பா பட வசூலையும் சந்திரமுகி திரைப்படம் முறியடித்தது.

இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா ஜோதிகா வடிவேலு பிரபு நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ரஜினி அவர்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு வேறொரு நடிகரை வைத்து தற்போது இயக்கி வருகிறார்.

அதாவது பி வாசு அவர்கள் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ் வைத்து தற்போது சந்திரமுகி 2ஆம் பாகத்தை   இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கமிட்டாகியுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆம் சந்திரமுகி 2ஆம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணவத்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர் இதனால் இவர்தான் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலாக கோலிவுட்டில் உலா வருகிறது.