தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் கடைசியாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு பாகங்களாக உருவாக உள்ள வெந்து தனித்தது காடு படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து வரும் படம் தான் பத்து தல.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பட குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளிவர உள்ளதாக படக்குழு ஒரு போஸ்டர் உடன் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் தீ தளபதி என தொடங்கும் பாடலை நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் அதுவும் இந்த பாடலுக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதற்காக நடிகர் விஜய்யிடம் பாராட்டையும் பெற்றார். இப்படி மற்ற நடிகர்கள் படங்களில் பாடிவரும் நடிகர் சிம்பு தன்னுடைய படங்களிலும் நடித்து வருவதில் பிசியாக இருந்து வருகிறார்.