தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து அதே தினத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து உள்ளது. மேலும் வாரிசு படக்குழுவினர் தற்போது பிரமோஷன் செய்து வருகின்றனர். ஆனால் துணிவு படத்திற்காக பிரமோஷன் செய்ய வேண்டாம் என்று அஜித் அவர்கள் கூறியுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் படம் நல்ல ஓடினாலே படத்துக்கு பிரமோஷன் தான் என்று கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வாரிசு படகுழு அடுத்ததாக இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர் டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறது.
ஆனால் துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கள் சில்லா சில்லா என தொடங்கும் பாடல் மட்டும் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில் இரண்டாவது பாடல் எப்போ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்த நேரத்தில் தான் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் காசேதான் கடவுளடா தொடங்கும் பாடல் விரைவில் வெளியாகும் என ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகும் என கூறிவந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது படக்குழு 18ஆம் தேதி இன்று 2pm மணிக்கு இந்த பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் துணிவு படத்தின் புதிய போஸ்டருடன் படக்குழு காசேதான் கடவுளடா பாடலின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் அஜித் அவர்கள் படங்களில் இல்லாத ஒரு போஸ்டராக இருப்பதால் ரசிகர்கள் இந்த போஸ்டரை அதிகம் விரும்புகிறார்கள்.
இதோ அந்த போஸ்டர்.
#KasethanKadavulada out tomorrow at 2 pm
Stay Tuned#ThunivuSecondSingle#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@BoneyKapoor @ZeeStudios_ @VaisaghOfficial @Udhaystalin @BayViewProjOffl @SureshChandraa @ProRekha @zeemusicsouth pic.twitter.com/XLJVdyxRYS
— Ghibran (@GhibranOfficial) December 17, 2022