கலகலப்பு பட நடிகைக்கு கொரோனா அவரே வெளியிட்ட பதிவால் அதிர்ந்த தமிழ் திரையுலகம்.!

kalakalappu
kalakalappu

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி. இவர்  தெலுங்கு, மலையாளம், கன்னடம்  என அனைத்து சினிமா துறையிலும் கதாநாயகியாக தற்போது வலம் வருகிறார் அந்த வகையில் இவர் தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே அரைகுறை டிரஸ் போட்டுக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் மேலும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது இதன் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு அதிகரித்தது. இதை  தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் அத்தகைய படங்கள் திரையரங்கில் சொல்லும் அளவிற்கு ஓடாவிட்டாலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இருப்பினும் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் பிற மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நிக்கி கல்ராணி அவர்கள் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது தனக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் மேலும் தற்பொழுது உடல்நிலை முன்னேறி உள்ளதாகவும் கூறி உள்ளார் அது மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள  அரசு ஊழியர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு.