சத்தமே இல்லாமல் பூஜையை போட்ட சூர்யா – சிவா கூட்டணி. வைரலாகும் புகைப்படம்.

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்காக பல சிறந்த படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் சூர்யா தற்போது இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்  படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் இயக்குனர் பாலா வணங்கான் படத்தின் கதையில் பல மாற்றங்களை கொண்டு வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே செல்கின்றன. அதனால் சூர்யா இந்த படத்தை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி இருந்தார்.

அப்படி சிறுத்தை சிவா உடன் ஒரு படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் போன்ற படங்களில் சூர்யா நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அண்மையில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தை சூரியா தயாரித்து வெளியிட்டிருந்தார்.

அந்த படத்திற்கான ஆடியோ லான்ச் வெற்றி விழா போன்ற பல இந் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் சிறுத்தை சிவா உடல் இணைந்து சூர்யா கூட்டணி அமைப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படத்திற்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இந்த படத்தை யு வி கிரியேஷன் தயாரிக்கிறது மற்றும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு டிஎஸ்பி தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்த படம் சூர்யாவுக்கு 42 வது திரைப்படமாகும் அந்த படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்..

surya
surya
surya
surya