நடிப்பிற்கு பெயர் போன ஹீரோக்களில் ஒருவர் விக்ரம் இவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுக்கக்கூடியவர் இருப்பினும் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்காமல் இருந்து வருகின்றன ஆனால் இவரது கேரியரில் பல ஹிட் படங்கள் இருக்கின்றன அதில் ஒன்றாக பார்க்கப்படுவது ஜெமினி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்திருப்பார். விக்ரம் வழக்கம் போல தனது திறமையை காட்டி அசத்திருப்பார் அவருக்கு ஜோடியாக கிரண் நடித்திருந்தார் மேலும் காலபவன் மணி, தென்னவன், ராணி, ஜெமினி கணேசன், தாமு, வடிவேலு, நமீதா..
மற்றும் மனோரமா, வினு சக்கரவர்த்தி, ரமேஷ் கண்ணா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் காமெடி ஆக்சன் செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாகவும் நக்கல் நையாண்டி என அனைத்திலும் சிறப்பாக மிரட்டி இருப்பார் காலபவன் மணி.
படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனேயே ரஜினி கிரண் நடித்த திவானா பாடலை பார்க்க விரும்பினார். காரணம் கிரணை தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய அவரது நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷனை பார்க்க விரும்பினார் படம் முழுவதையும் அவருக்கு போட்டு காட்டினோம் பாடல் காட்சியைப் பார்த்ததுமே..
படம் ஹிட் சார் என்றார் அது எப்படி சொல்றீங்க என்று நான் கேட்டேன் அதற்கு அந்த பீல் வந்தது அதனால் தான் என்னால் நிச்சயமாக ஹிட் என்று சொல்ல முடிந்தது என சூப்பர் ஸ்டார் கூறினாராம்.. அவர் சொன்னது போலவே படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.